நிலநடுக்கம் ஏற்பட்டதாக கிளம்பிய வதந்தியால் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!
நிலநடுக்கம் ஏற்பட்டதாக கிளம்பிய புரளியால் பீகாரில் நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 58 பேர் காயமடைந்தனர். ஐடிஐ தேர்வு எழுதச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் பயணிகள் சனிக்கிழமை நள்ளிரவில் ஷெரீப் ரயில் நிலையம் வந்தனர். அப்போது ரயில் நிலைய மேற்கூரை ஆஸ்படாஸ் தகடுகள் கீழே விழுந்ததால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது.அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு, நெரிசலில் சிக்கி பிளாட்பாரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் உட்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.