INDvsBAN ODI: ரோஹித் சர்மா காயம்! மருத்துவமனையில் அனுமதி.!
இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது ரோஹித் ஷர்மா காயமடைந்து எக்ஸ்-ரே சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஸ்லிப் திசையில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் சர்மா, 2ஆவது ஒவரில் வந்த கேட்ச்சை பிடிக்க முயற்சிக்கும் போது, பந்து கையில் பட்டு காயமடைந்தார்.
இதனால் இடது கையில் காயம் ஏற்பட்டு வலியால் ரோஹித் சர்மா, துடித்தார். ரோஹித் சர்மாவை சோதித்த இந்திய அணியின் மருத்துவக்குழு எக்ஸ்-ரே சோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
Update: India Captain Rohit Sharma suffered a blow to his thumb while fielding in the 2nd ODI. The BCCI Medical Team assessed him. He has now gone for scans. pic.twitter.com/LHysrbDiKw
— BCCI (@BCCI) December 7, 2022