கனமழை எதிரொலி – அனைத்து மண்டல அதிகரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை..!

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, அனைத்து மண்டல அதிகரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை  பெய்யக்கூடும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, அனைத்து மண்டல அதிகரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, மேலும், கடந்த மழையின்போது மழைநீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

RELATED ARTICLES