தமிழகத்தை நெருங்கும் புயல்.! காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு.!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் அதிகரித்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையில் இருந்து 770 கிமீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் அதிகரித்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 15கிமீ வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து 690கிமீ தூரத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று மாலை உருவாகும் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என இன்னும் குறிப்பிடப்படவில்லை. வழக்கமாக புயல் 90 கிமீ வேகத்தில் கரையை கடக்கும். வருகிற புயல் வலுவிலக்குமா? அல்லது நெருங்கியவுடன் வலுக்கூடுமா என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அது நெருங்கும் போதுதான் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் எந்தெந்த இடத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.