INDvsBAN ODI: தொடரை சமன் செய்யுமா? இந்தியா! இன்று 2-வது ஒருநாள் போட்டி.!
இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேசமும், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் களமிறங்குகிறது. போட்டி தாக்கா மைதானத்தில் 11:30க்கு தொடங்குகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (C), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென், உம்ரான் மாலிக், ரஜத் படிதார், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி , அக்சர் படேல்
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ்(C), அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், ஹசன் மஹ்மூத், முஸ்தபிசுர் ரஹ்மான், யாசிர் அலி, தாஸ்கின் அலி, தாஸ், நூருல் ஹசன்