இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? நாளை விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை!
மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில், இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்கு பதிவாகியுள்ளது. இரண்டாம் தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குஜராத்தில் மாநிலத்தில் மொத்தமுள்ள 183 தொகுதிகளில் ஆட்சியமைக்க 92 இடங்கள் அவசியம். இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என கூறப்படுகிறது.
இதுபோன்று இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாறும் வரலாறும் உண்டு.
ஆம் ஆத்மி களமிறங்கியதால் இரு மாநிலத்திலும் மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு வெற்றி என கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கின்றன. இருந்தாலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? என தெரிந்துவிடும்.