வடகொரியாவில் இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு..! என்ன காரணம் தெரியுமா..?
தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு மரண தண்டனை.
வடகொரியாவை பொருத்தவரையில் அந்த நாட்டில் போடப்படும் சட்டங்கள் ஒரு வித்தியாசமான முறையில் தான் காணப்படுகிறது. அந்நாட்டில் போடப்படும் பல சட்ட திட்டங்கள் வெளி உலகத்திற்கு எதுவும் தெரிவதில்லை.
அந்த நாட்டில், பொதுவாக வெளிநாட்டு சினிமாக்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருகின்றனர் .அங்கு போடப்படும் சட்ட திட்டங்களை மீறும் மக்களுக்கு சிறை தண்டனை, அபராதம் மற்றும் மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களை பொறுத்தவரையில் வடகொரிய அரசு அனுமதித்த ஊடகங்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக 16 மற்றும் 17 வயதை உடைய பள்ளி மாணவர்கள் இருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடைபெற்றாலும் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.