இன்று உருவாகிறது புயல்..! தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!
புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது.
இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு குழு வருகை தரவுள்ளது.