அம்பேத்கருக்கு பட்டை, காவி உடை! வைரலாகும் போஸ்டர் – திருமாவளவன் கடும் கண்டனம்

Default Image

அம்பேத்கரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள்.

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சமயத்தில், புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரைலாகி வருகிறது.

அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அம்பேத்கர் இந்து சமயத்தை சார்ந்தவராக சித்தரிக்கப்பட்ட போஸ்டருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்