அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை செய்துவருகிறார் பிரதமர் மோடி.! இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம்.!
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம்.
இன்று நாடுமுழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பி அண்ணல் அம்பேத்கர். மேலும் அவர் பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மை வல்லுனராகவும் புகழ்பெற்றார் என அம்பேத்கர் புகழை கூறினார் எல்.முருகன்.
அதே போல பிரதமர் மோடி பற்றியும் புகழாரம் சூட்டினார் எல்.முருகன். பிரதமர் பற்றி கூறுகையில், ‘ அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கார் பிறந்த இடம், லண்டனில் அவர் படித்த வீடு, மும்பையில் பிரதமர் வாழ்ந்த இல்லம், அவர் டெல்லியில் மறைந்த இடம் என அம்பேத்கர் வாழ்ந்த 5 இடங்களை புனித தலங்களாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு பேசினார் மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன்.