டெலிகிராம், வாட்ஸாப் மூலம் புதுப்புது போதை வஸ்துக்கள்… பெங்களூரு மாணவர்கள் அட்டகாசம்.!
போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர்.
இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் அண்மையில் பெங்களூருவில் போதைப்பொருளுக்கு எதிரான சோதனையில் பல்வேறு போதை வஸ்துக்கள் சிக்கியுள்ளன.
பெங்களூருவில் நடந்த சோதனையில் ஹைட்ரோபோனிக் கஞ்சா, கோகோயின் மற்றும் எல்எஸ்டி போன்ற போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சோதனையின் போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பெரும்பாலானோர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள்கள் டார்க் வெப், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இந்த போதைப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.