ப்பா செம டார்சர் பண்ணிட்டாங்க… ஆனந்த குளியலுடன் ஆட்டம் போட்டு பதிவிட்ட சியான் விக்ரம்.!
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இதையும் படியுங்களேன்- 100 முறை அதை பார்த்துட்டேன்… ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க… தமிழ் நடிகரிடம் கெஞ்சும் செல்லக்குட்டி ஜான்வி.!
மேலும் இந்த படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@chiyaan & @beemji
chilling in water with the crew at the shooting spot of #Thangalaan from #Hogenakkal pic.twitter.com/LWKW9hRB4E— CineBloopers (@CineBloopers) December 6, 2022
இந்நிலையில். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஓசூரில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் படக்குழுவினருடன் ஓசூரில் உள்ள ஒகேனக்கல் அருவியில் ஜாலியாக குளித்துள்ளனர்.
இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan) December 5, 2022
அந்த வீடியோவை விக்ரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்” என பதிவிட்டுள்ளார்.