2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஏற்க முடியாது..!
ஆந்திர மாநில தெலுங்குதேசம் கட்சி மந்திரி காலவா சீனிவாசலு கூறியதாவது:–
2019 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தெலுங்குதேசம் கட்சி ஏற்றுக்கொள்ளாது. காங்கிரசும், தெலுங்குதேசமும் ஒருபோதும் கூட்டணி சேராது. பா.ஜனதாவை சேர்ந்தவரோ, காங்கிரசை சேர்ந்தவரோ பிரதமராக வரக்கூடாது என்பதில் நாங்கள் 100 சதவீதம் தெளிவாக இருக்கிறோம். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவுடன் மாற்று ஏற்பாடுகள் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.