10 சதவீத இடஒதுக்கீடு.! காங்கிரஸை தொடர்ந்து திமுக சார்பிலும் சீராய்வு மனு தாக்கல்.!

Default Image

OBC பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு அளித்துள்ளது.  

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் OBC பிரிவில் பொருளாதாரத்தில்  பின்தங்கியவர்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி , MBC, BC வகுப்பினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடு போல 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிஅம்மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த நவம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில் 3 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடை ஆதரித்தும், 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். அதில் அதிகபட்சமாக இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வந்ததால், 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பாக வெளியானது.

இந்த தீர்ப்பை எதித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இதனை தொடர்ந்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்த மனு மீதான விசாரணை வரும்போது, தங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதே சீராய்வு மனுவின் நோக்கமாகும்.

திமுக அளித்த சீராய்வு மனுவில், 8 லட்சம் ஆண்டு வருமானமாக உள்ளவர்களை ஏழையாக கருதுவது தவறு. இந்த வழக்கை மீண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது . மேலும், முன்னேறி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டால் 133 கோடி மக்கள் பாதிப்படைகின்றனர். ஓபிசி , எஸ்சி ,எஸ்டி பிரிவினரை புறந்தள்ளி இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29112024
Murder
TN Rain - Fengal Puyal
Gold Price
PM Modi - MK Stain
Vidamuyarchi Teaser
Tamilnadu weatherman Pradeep john say about Cyclone fengal