China Astronauts: பத்திரமாக பூமியில் தரை இறங்கிய சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் .!
6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
சீனா, டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சென்சு-13 என்ற விண்கலம் மூலம் 3 சீன வீரர்களை விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுப்பியது.
இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்று 6 மாதங்கள் முடிந்த நிலையில் அவர்கள் 3 பேரும் மங்கோலியப் பகுதியில் பத்திரமாக தரை இறங்கினர். சீனாவால் தொடர்ந்து 7 முறை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மூவரும் 8 வது முறையாக விண்வெளிக்குச் சென்று பத்திரமாக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.