Ind vs Ban: இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Default Image

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

இந்தியா மற்றும் பங்காளதேஷ்க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி  டாக்காவில்  உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே தவான்(7) மற்றும் கோலியின்(9) விக்கெட்டை இழந்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா (27) ரன்களும் ஷ்ரேயாஸ் யர் (24),கே எல் ராகுல் (73)எடுத்தனர்.இந்திய அணி 41.2 ஓவர்களிலே அனைத்து  விக்கெட்களையும் இழந்து 186 ரன்களை எடுத்தது.

187 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கினாலும் பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.பங்களாதேஷ் அணி தோற்று விடும் என்று இருந்த எதிர்பார்ப்பில் மெஹிதி ஹசன் விடாப்பிடி ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 46 ஓவரில்  1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக மெஹிதி ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்