இவர்களுக்கான இட ஒதுக்கீடு 76% ஆக உயர்வு – மசோதா நிறைவேற்றம்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தும் 2 மசோதாக்களை சத்தீஸ்கர் விதான் சபை நிறைவேற்றியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்களை சத்தீஸ்கர் விதான் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில், பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தப்பட்டது.
அரசு வேலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை 76% ஆக உயர்த்தும் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எஸ்டி பிரிவுக்கு 32%, பட்டியல் சாதிகளுக்கு (எஸ்சி) பிரிவுக்கு 13%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) பிரிவுக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.