நடவு செய்யப்பட்ட விளைநிலத்தில் களமிறக்கப்பட்ட ஜேசிபி.! விவசாயிகள் கடும் எதிர்ப்பு.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மீது ஜேசிபி இயந்திரம் களமிறக்கப்ட்டு விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புறவழிசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி கையகப்படுத்துவதில் விலை நிலங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விலை நிலங்களில் நடவு செய்யப்பட்டு இருந்தது. நடவு செய்து 60 நாட்களே ஆன நிலையில் தற்போது அரசு அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஜேசிபி எந்திரம் அங்கு களமிறக்கப்ட்டு, விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.