நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார்.