சின்ன வயசுலையும் நம்ம த்ரிஷா அழகு தான்..! குட்டி குந்தவையை நீங்களே பாருங்க..
நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் எதுவுமே தெரியாத குழந்தை போல மிகவும் அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயசுலேயே குந்தவை அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
#TrishaKrishnan | #Trisha | #PonniyinSelvan1 | #PS2 pic.twitter.com/6T501XBeRa
— CineBloopers (@CineBloopers) December 2, 2022
மேலும் நடிகை த்ரிஷா கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்- அஜித்தை பின்னுக்கு தள்ளிய சன்னி லியோன்… இது என்ன புது கதையா இருக்கு.?
இதனை தொடர்ந்து த்ரிஷா தற்போது “தி ரோடு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தவிர்த்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.