2020இல் இறந்தவர் பெயரில் கூட பயிர்க்கடன்.! 244 கரூர் விவசாயிகளுக்கு வந்த குளறுபடி தகவல்.!
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், அவரும் 2022ஆம் ஆண்டு கடன் வாந்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியான விவசாயிகள், நேரடியாக குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று முறையிட்டுள்ளனர். மேலும் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.