டெல்லி கல்லூரி சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாக்கியங்கள்… விசாரணைக்கு உத்தரவிட்ட நிர்வாகம்.!.
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்டதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பல சுவர்களில் பிராமணர்களுக்கு எதிராக சில ஸ்லோகன்கள் எனப்படும் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனால் கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதனை அடுத்து இந்த வசனங்களை எழுதியது யார் என்ற விசாரணைக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தயார் செய்யும் படி கல்லூரி நிர்வாகம் உத்தரவை அனுப்பியுள்ளது.
இந்த அறிக்கையை கல்லூரி முதல்வர், கல்லூரி துணை சேர்மனிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் எந்தவிதமான வன்முறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை எனவும் துணை சேர்மன் அனுப்பிய உத்தரவில் குற்ப்பிடப்பட்டுள்ளதாம்.