இவரது மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் குறிப்பில், ‘தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு. கே. முரளிதரன் (66) அவர்கள் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
வெற்றிப்படங்களைத் தயாரித்து 90’கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள – தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட திரு. கே. முரளிதரன் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டார். மூத்த தயாரிப்பாளரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
1/2 pic.twitter.com/gTtEIEc6RO
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 2, 2022