டிசம்பர் 26 அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.! மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!
மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவித்ததன் படி, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் மாநில அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் எம அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொல்கத்தாவில் முத்திரை வருவாய் சேகரிப்பாளர் அலுவலகங்கள் மட்டும் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேற்கு வங்க அரசின் கீழ் செயல்படும் துறைகள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.