மறைந்த ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றியவர் காலமானார்..! ஓபிஎஸ் இரங்கல்..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்த திரு.சீமைச்சாமி அவர்கள் காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் காலமானார்.
இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. தமிழரசன் அவர்களின் சகோதரரும், தமிழ்நாடு காவல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவருமான திரு. K. சீமைச்சாமி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பாதுகாப்புப் பிரிவில் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டதில் முக்கியப் பங்கு வகித்தவர் திரு. சீமைச்சாமி அவர்கள். திரு. சீமைச்சாமி அவர்களின் பணி போற்றத்தக்கது.
திரு. சீமைச்சாமி அவர்களை இழந்து இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/rsBcSBOVHT
— O Panneerselvam (@OfficeOfOPS) December 1, 2022