தமிழ்நாட்டில் கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் கற்றுத்தரும் அமேசான்… 250 பள்ளிகளில் நடைமுறை.!
தமிழ்நாட்டில் 250 பள்ளிகளில் கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் தனது ‘ஃபியூச்சர் என்ஜினீயர்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 250 பள்ளிகளுக்கு கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள ஆஷா தொண்டுநிறுவனமும் இணைந்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சென்னையின் புறநகர் பகுதியான ராமஞ்சேரியில் உள்ள ஆசிரியரான சீதா எழிலரசி நடத்தி வரும் வகுப்புகள் மிகவும் வேடிக்கையாகவும் மாணவர்களுக்கு மிகவும் புரியும் வகையிலும் இருக்கின்றது.
இவரது வகுப்புகளில் குழந்தைகள் ‘கப் கேம்ஸ்’ மற்றும் தரையில் கண்ணாடியால் வரையப்பட்ட கட்டங்கள் மூலம் கோடிங்கை எளிதாகக் கற்றுகொள்கின்றனர். ஃபியூச்சர் என்ஜினீயர் திட்டத்தின் மூலம் அமேசான் நிருவனம் மாணவர்களுக்கு, ஆசிரியர்களை நியமித்து மடிக்கணினிகளையும் வழங்கியுள்ளது.
தற்பொழுது 100 பள்ளிகளில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ள அமேசான் மற்றும் ஆஷா தொண்டுநிறுவனம் இதன் அடுத்தகட்டமாக மேற்கொண்டு 150 பள்ளிகளிலும் 90,000 மாணவர்களுக்கு ஃபியூச்சர் என்ஜினீயர் திட்டம் பயன்பெறும் வகையில் பாடங்களைக் கற்பிக்கின்றன.
இவ்வாறு எளிய முறையில் கற்று தருவதால் குழந்தைகளும் மிகவும் ஆர்வத்துடன் இந்த கோடிங்கை கற்று கொள்கின்றனர் என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிவரும் ஆஷா தொண்டு நிறுவனத்திற்கு கணினி ஆசிரியரான சீதா எழிலரசியின் பங்க்கு மிகவும் பெருமை படுத்தும் விதமாக உள்ளது.