டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை – டாஸ்மாக் நிர்வாகம்

Default Image

டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக அறிக்கை. 

பெரும்பாலான கடைகளில் ஊழியர்கள் பணியில் இல்லாமல் வெளி நபர்களை பணியில் அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரியும் பொழுது சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளரின் அனுமதி பெற்று வருகை புரிதல் வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சமீப காலமாக கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவதும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று தங்கள் சங்கங்களின் சார்பாக பணி மேற்கொள்ளுதல், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சங்கங்களின், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள செல்லுதல் போன்ற செயல்பாடுகளினால் கடைப்பணியில் இருப்பதில்லை என்பது தெரியவருகிறது.

இதனை தலைமை அலுவலக ஆய்வு குழுவினரால் மதுபான சில்லறை விற்பனை கடைகளை ஆய்வு செய்தபொழுது பெரும்பாலான கடைப்பணியாளர்கள் கடைபணிகளில் இருப்பது இல்லை என்பதும், வெளிநபர்களை கடைபணிகளில் ஈடுபடுத்துவதும் தெரியவருகிறது. எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கீழ்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

கடைப் பணியாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கோ, டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கோ ஏதேனும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (வரையறுக்கப்பட்டது) மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித் தொகுப்பு நடவடிக்கையினை எடுத்திட மாவட்ட – 2014 (விதித் தொகுப்பு)-ன் அடிப்படையில் உரிய மேலாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சுற்றறிக்கையினை இருப்புக் கோப்பில் பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்