இன்று முதல் குடியரசு தலைவர் மாளிகையை பார்வையிட மக்களுக்கு அனுமதி..!
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொண்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என்றும், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை செவ்வாய் முதல் ஞாயிறு வரை 6 நாட்கள் மக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய்காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.