ஆதார் எண் இணைப்பு! தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை!
மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை.
கள்ள ஓட்டு, இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி தமிழகத்திலும் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு தெரிவித்திருந்தார். இருப்பினும், பணி முழுமையாக நடைபெற வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் வாக்காளர் அடையாள எண் – ஆதார் இணைப்பு பணிகள் முழுதாக நிறைவுபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.