திருமணத்திற்கு முன் லிவ்-இன் உறவு.! உண்மையை போட்டுடைத்த மஞ்சிமா மோகன்…

Default Image

தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் மலர்ந்த இளம் காதல் ஜோடிகளான மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக் நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடிகளின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

GauthamWedsManjima
GauthamWedsManjima [Image Source: Twitter ]

இந்நிலையில், மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் திருமணத்திற்கு முன், டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டாலும் அவர்கள் தங்கள் உறவை பெரும்பாலும் மூடி மறைத்தே வைத்திருந்தனர். ஆனாலும், கடந்த சில மாதங்களாக இவர்களை பற்றி பல வதந்திகள் இணையத்தில் பரவியது.

GauthamWedsManjima
GauthamWedsManjima [Image Source: Twitter ]

அந்த வகையில், அந்த வைரல் வதந்திகளில் ஒன்றாக மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நடிகை மஞ்சிமா மோகன் ஒரு நேர்காணலில், இதற்கு முறையான விளக்கம் கொடுத்தார்.

GauthamKarthik And Manjima Mohan
GauthamKarthik And Manjima Mohan [Image Source: Twitter ]

மஞ்சிமா மோகன் இது பற்றி பேசுகையில், கொரோனா தொற்றுநோயின் போது, ​​நான் என் வீட்டில் தனியாக இருந்தேன். கௌதம் தன் அம்மாவுடன் அவனுடைய இடத்தில் இருந்தான்.

GauthamKarthik And ManjimaMohan
GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

எங்களை பொது இடங்களில் ஒன்றாகப் பார்த்ததால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என செய்தி ஊடகங்கள் நினைத்திருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மையல்ல, ஆனால், இப்படி செய்திகள் வெளிவந்ததை கண்டுகொள்ளவில்லை என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்