1 மணி நேர போராட்டம்…மலைப்பாம்பிடம் வசமாக சிக்கிய நபர்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ…

Default Image

மலை பாம்பிடம் சிக்கிய நபரை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து, கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசிக்கும் சங்கர் என்பவரை சுமார் 9 அடி மலைப்பாம்பு அவரது காலில் இறுக்கமாக சுற்றியதை அடுத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் மலைப்பாம்பின் பிடியை இழக்க முடியவில்லை.

இறுதியாக, பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்னர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த மலைப்பாம்பின் பிடியில் இருந்து அந்த நபரை மீட்டனர்.

பின்னர் மீட்பு படையினரால் மலைப்பாம்பு அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது.  தற்போது, இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்