எம்ஜிஆர் படம் ரிலீஸ் ஆகும் போது முதல் ஆளாக பார்ப்பேன் – மு.க ஸ்டாலின்
பெரியப்பா என்ற முறையில் எம்ஜிஆர் எனக்கு நிறைய புத்திமதிகள் கூறியிருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். முதல்வர் அவர்கள் ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி அம்மாள். இந்த ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி மிக பிரமாண்டமாக உருவாக உறுதுணையாக இருந்தவர் கலைஞர்.
20ஆண்டு காலம் திமுகவில் பயணித்தவர் எம்.ஜி.ஆர். பெரியப்பா என்ற முறையில் எம்ஜிஆர் எனக்கு நிறைய புத்திமதிகள் கூறியிருக்கிறார் .என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர். தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். Annaist (அண்ணாவின் கொள்கையாளர்) ஆகவே இருந்தார். எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் ரிலீஸ் ஆகும் போது முதல் ஆளாக பார்ப்பேன் என தெரிவித்துள்ளார்.
செவிக்குறைபாடு, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.