சென்று வாருங்கள் லட்சுமி…! எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்…! – அண்ணாமலை
நாடிவரும் பக்தர்களை தும்பிக்கையால் ஆசீர்வதித்து வாழ்த்திய லட்சுமியை இழந்து விட்டோம் என்ற செய்தி மிகுந்த மனக்கவலை அளித்தது என அண்ணாமலை ட்வீட்.
புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது.
உயிரிழந்த யானைக்கு புதுச்சேரி ஆளுநர் அஞ்சலி செலுத்தினார். மேலும் பொதுமக்கள் பலர் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், யானை லட்சுமி உயிரிழப்பு குறித்து அண்ணாமலை அவரகள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதுச்சேரியில் மணக்குள விநாயகரின் மறு வடிவாக, நம்பிக்கையுடன் நாடிவரும் பக்தர்களை தும்பிக்கையால் ஆசீர்வதித்து வாழ்த்திய லட்சுமியை இழந்து விட்டோம் என்ற செய்தி மிகுந்த மனக்கவலை அளித்தது.
திருக்கோவில் வாசலில், ஒரு ஐந்தறிவு பிராணியாக இல்லாமல், ஐம்புலனையும் அடக்கிய ஞானி ஆக, தன் அன்பான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்த லட்சுமி வெறும் யானையாக மட்டுமின்றி புதுச்சேரியின் அடையாளச் சின்னமாக திகழ்ந்தது. சமீபத்தில் நான் புதுச்சேரி சென்ற போது, லட்சுமியிடம் ஆசி பெற்றதும், அருகில் நின்று அன்பு பெற்றதும், என் விழிகளில் இருக்கிறது இன்னும் ஈரமாக சென்று வாருங்கள் லட்சுமி. எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்று வாருங்கள் லட்சுமி.
எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்.@SuryahSG (3/3)
— K.Annamalai (@annamalai_k) November 30, 2022