மது வாங்கி தாங்க.. இல்லைனா குதிச்சிருவேன்.! அடம்பிடித்த இளைஞர்…அலேக்காக தூக்கிய போலீசார்.!
வடமாநில இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள திருவொற்றியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் இரும்புக் கம்பியின் மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மதுபாட்டில் வாங்கி தந்தால் தான் கீழே இறங்குவேன் என அந்த இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர். பிறகு அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரிடம் கீழே இறங்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எவ்வளவோ கூறியும் கீழே இறங்க அந்த இளைஞர் அடம் பிடித்துள்ளார்.
இதனால், வேறு வழியின்று, ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து அவரிடம் கொடுக்க அந்த மதுபாட்டிலை இளைஞர் வாங்கிக்கொண்டு மீண்டும் இறங்காமல் குதிக்கப் போவதாகப் விளையாட்டு காட்டியுள்ளார்.
இதனால் கடுப்பான போலீசார் உடனடியாக அந்த கம்பியில் இருந்து மெதுவாக இறங்கி வலுக்கட்டாயமாக அந்த இளைஞரை பாதுகாப்பாக அங்கிருந்து அலேக்காக தூக்கினர். மேலும், அந்த இளைஞர் கீழே விழுந்தால் அவரை காப்பாற்றுவதர்காக கீழே தீயணைப்பு துறையினரும் இருந்தார்கள். இந்த சம்பவத்தால் திருவொற்றியூர் ரயில்வே பகுதி சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது.