டிசம்பர் 1ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்! – ரிசர்வ் வங்கி

Default Image

சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை வருகிற டிசம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

நாட்டில் சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான (first pilot) டிஜிட்டல் ரூபாயை வருகிற டிசம்பர் 1ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 1ம் தேதி நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக வெளியிடப்படும். சோதனை அடிப்படையில் 8 வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும்.

அதன்படி, முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது என்றும் விரைவில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதியும், ஆமதாபாத், குவாஹத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ: PressRelease/PDFs/PR12755768C88D86624673A14B2C7F5CF68908.PDF

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்