விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு.
சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை முதல் sdat@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய வழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு சிறப்புத்தொகை வழங்கப்படும். சிறப்பு தொகை பெற தகுதியானோரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் (1/2)#CMMKStalin #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @SMeyyanathan pic.twitter.com/zTpJFAfpZV
— TN DIPR (@TNDIPRNEWS) November 29, 2022