பில்கிஸ் பானு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை குஜராத் அரசு அண்மையில் விடுத்திருந்தது.
2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின் போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 குற்றவாளிகளின் தண்டனை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி 11 பேரையும் விடுவித்தது குஜராத் அரசு.
இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.