இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! பாஜக. காங்கிரஸ்.. ஆம் ஆத்மி… குஜராத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. 

குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 27 வருடமாக ஆட்சியில் இருக்கும் பாஜக தனது வெற்றியை இந்த முறையும் பதிவு செய்து 7வது முறையாக குஜராத்தில் ஆட்சி கட்டிலில் அமர முயற்சி செய்கிறது.

அதே போல காங்கிரஸ் கடந்த சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியதால் இந்த முறை வெற்றிபெறும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. (கடந்த முறை பாஜக 99 காங்கிரஸ் 77).

இந்த இரு முனை போட்டியை மும்முனை போட்டியாக மாற்ற களமிறங்கிய கட்சி என்றால் அது ஆம் ஆத்மி தான். டெல்லி, பஞ்சாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய முனைப்பில் தற்போது குஜராத் பக்கம் வந்துள்ளது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்ததும் வருகிறார்.

ஆதலால், இந்த முறை குஜராத் சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார் என்கிற எண்ணம் வடமாநிலங்கள் தாண்டி இந்தியா முழுவதும் ஊற்று நோக்க வைத்துள்ளது. இன்று மாலை முதற்கட்ட தேர்தல் தொகுதிகளுக்கு முடிந்ததும், அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment