முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என அழைத்த, கர்நாடக பேராசிரியர்.!

Default Image

கர்நாடகாவில் பேராசிரியர், முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என்று கூறியதற்கு மாணவன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் மதவாத பிரச்சனைகளுக்கு நடுவில், கர்நாடகாவின் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியர், இளம் முஸ்லிம் மாணவர் ஒருவரை மத அடையாளத்தை வைத்து அவரை பயங்கரவாதி என்று அழைத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

வகுப்பில் இருந்த மற்றொரு மாணவர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதில் முஸ்லிம் மாணவர் தனது பேராசிரியரிடம், இஸ்லாமிய வெறுப்பு கருத்து குறித்து கேள்வி எழுப்புவதைக் காணலாம்.

வகுப்பில் பேராசிரியரால் பயங்கரவாதி என்று கூறப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவர், இந்த நகைச்சுவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை! என் மதத்தைப் பற்றி நீங்கள் கேலி செய்ய முடியாது. தான் கூறியதை உணர்ந்த பேராசிரியர், நீங்கள் என் மகனைப் போலவே இருக்கிறீர்கள் என்று அந்த மாணவனை அமைதிப்படுத்த முயன்றார்.

அதற்கு மாணவர், என் தந்தை என்னிடம் இதைச் செய்தால், நான் அவரை நிராகரித்து விடுவேன் என்று கூறினார். பேராசிரியர், இன்னும் நிலைமையைக் கட்டுப்படுத்த இது ஒரு வேடிக்கையான விஷயம் என்று கூற, மேலும் வருத்தமடைந்த மாணவன், இல்லை சார் இது வேடிக்கையான விஷயம் அல்ல. 26/11 வேடிக்கையானது அல்ல.

இஸ்லாமிய பயங்கரவாதம் வேடிக்கையானது அல்ல. இந்த நாட்டில் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு தினமும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது வேடிக்கையானது அல்ல என்றார். ஆசிரியர் மீண்டும் அவரை தனது மகன் என்று அழைக்க முயன்ற போது, ​​மாணவர் அவரிடம் உங்கள் சொந்த மகனை நீங்கள் பயங்கரவாதி என்று அழைப்பீர்களா என்று கேட்டார்.

நீங்கள் ஒரு பேராசிரியர். எப்படி என்னை நீங்கள் இத்தனை பேர் முன்னிலையில், ஒரு வகுப்பில் அப்படி அழைக்க முடியும், என்று கூறினார். இறுதியாக, பேராசிரியர் மன்னிப்பு கேட்கும் போது, மன்னிப்பு கேட்பதன் மூலம் இங்கு நீங்கள் நினைப்பது மாறாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்