FIFA WorldCup2022: தொடரை விட்டு வெளியேறினாலும், உலகக் கோப்பையில் கனடா படைத்த வரலாற்று சாதனை.!
2022 ஃபிஃபா உலகக் கோப்பையின் வேகமான கோலை அடித்து கனடா, 36 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் கோலை அடித்தது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் குரூப்-F இல் கனடா மற்றும் குரோஷிய அணிகள் கலீஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் கனடாவின் அல்போன்சா டேவிஸ், ஆட்டம் தொடங்கி 68வது நொடியில் முதல் கோல் அடித்து 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் வேகமாக கோல் அடித்துள்ளார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் பங்கேற்ற கனடா அணிக்கு இது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அல்போன்சா டேவிஸ், கனடா அணியின் வரலாற்று கோலை அடித்துள்ளார். அதுவும் 68 நொடிகளில் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
????????????-???????????????????????? ???????????????????????? ⚡
Watch @AlphonsoDavies script history by scoring ????????’s first-ever #FIFAWorldCup goal ⚽#Qatar2022 #CROCAN #WorldsGreatestShow #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/lx4RhalAeC
— JioCinema (@JioCinema) November 27, 2022
இறுதியில் கனடா, இந்த போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று, புள்ளிகள் ஏதும் பெறாமல் இரண்டாவது அணியாக ஃபிஃபா 2022 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறி இருக்கிறது. முன்னதாக கனடா ஃபிஃபா உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோற்றிருந்தது.
இதன்மூலம், தொடரை நடத்தும் கத்தார் மற்றும் கனடா அணிகள் ஃபிஃபா 2022 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறி இருக்கின்றன.