ஐ.நா.தலைமையகத்தில் டிச.14ம் காந்தி சிலை திறப்பு!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு.
ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது, ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்படும். புகழ்பெற்ற இந்திய சிற்பி பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதாரால் செய்யப்பட்டது. இந்திய கவுன்சிலின் தலைவர் பதவிக்கான ஐ.நா.விற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது, இந்தியாவின் பரிசாக இது திறக்கப்படும்.