உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் – உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
திருவள்ளூரில் உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருந்ததால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடையை மூடி நடவடிக்கை.
திருவள்ளூர் நெற்குன்றம் பகுதியில் ரேணுகா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் திகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்த நிலையில் கடையை இழுத்து மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கறி வெட்ட உபயோகப்படுத்திய கட்டைகள், கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.