வெற்றிகரமாக பாய்ந்தது PSLV C-54! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு!
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சற்று முன் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது.
இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடலில் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க பூவினொக்கு செயற்கைகோள் உதவும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைகோள்களையும் விண்ணில் நிறுத்தியது. தற்போது வரை ராக்கெட் திட்டமிட்டபடி சென்றுகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
எனவே, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த, ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6, 8 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்களை ஒவ்வொன்றாக பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் நிலைநிறுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் சில பணிகள் பூர்த்தியடை வேண்டியுள்ளது என்றும் இந்த பணி முழுமையடைய சுமார் 2 மணி நேரம் ஆகும் எனவும் தெரிவித்தார்.