மேகாலயாவில் 7 மாவட்டங்களில் இணையதள முடக்கம்…! மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிப்பு..!
மேகாலயாவில் 7 மாவட்டங்களில் மேலும் 48 மணி நேரம் இணையதள முடக்கம் நீட்டிப்பு.
கடந்த 22ஆம் தேதி, மேகாலயா மாநிலம், அசாம் எல்லையையொட்டிய உள்ள மேற்கு ஜெயந்தியா மாவட்டத்தில் மரம் கடத்துவதாக கூறி லாரி ஒன்றை அசாம் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு மக்கள் கூட்டம் குவிந்தது. இதனை எடுத்து அசாம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், கலவரமாக மாறி துப்பாக்கி சண்டையாக உருவெடுத்தது. இந்த துப்பாக்கி சூட்டில், மேகாலயாவை சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தனர். மேலும் பல காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுவதால் இதனை தடுக்கும் வண்ணம் அங்கு 7 மாவட்டங்களில் இணையதள முடக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும், நவம்பர் 26 ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இந்த 7 மாவட்டங்களில் இணைய முடக்கம் தொடரும் என மேகாலயா அரசு உத்தரவிட்டுள்ளது.