கட்சி பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா நீக்கம்..! அண்ணாமலை அதிரடி..!
பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கம்.
தமிழக பாஜக OBC அணி மாநில பொது செயலாளர் திரு. சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், கட்சியின் பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்தும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் வளர்ச்சிக்கும் ஒரு தொண்டனாக அவர் பணியாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக OBC அணி மாநில பொது செயலாளர் திரு. சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்
செயல்களில்
ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், கட்சியின் பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்-மாநில தலைவர்
திரு. @annamalai_k pic.twitter.com/Pbr6U8byDh— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 24, 2022