முந்திரி விற்ற கல்லூரி மாணவிக்கு உதவிய அமைச்சரின் மகன்..!

Default Image

சுங்கச்சாவடியில் முந்திரி விற்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு திருமணம் ஆகி நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு திருமணம் முடிந்தது. இரண்டாவது பெண் வசந்தி வடலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தாய் தந்த இருவருமே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே விவசாயம் செய்து வருகின்றனர்.  வறுமையின் காரணமாக வசந்தி சிறுவயதிலிருந்தே தனது படிப்பிற்கும் அத்யாவசிய தேவைக்காகவும் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு உள்ளான நிலையில் தாய் தந்தையின் கஷ்டத்தை போக்கும் வண்ணம் கல்லூரி முடித்துவிட்டு இரவு நேரங்களில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முந்திரி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை கல்லூரி படிப்பிற்கும் தனது இதர செலவிற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், முந்திரி விற்ற பெண்ணை அவரிடம் விவரங்களை கேட்டு ஒரு நபர் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை  இணையத்தில் தீயாய் பரவிய நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரும், அமைச்சர் செந்தில் மஸ்தானின் மகனுமான மொக்தியார் மஸ்தான் வசந்தி மற்றும் அவரது தந்தையை நேரடியாக அழைத்து அவரது படிப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தார்.

மேலும் இந்த ஆண்டு அவர் செலுத்த வேண்டிய ரூ.22,500 வசந்தியிடம் வழங்கினார். மேலும் படிப்பிற்காக எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை அழைக்குமாறும் தொலைபேசி எண்ணையும் அவரிடம் கொடுத்து வழங்கியுளளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்