2022 கால்பந்து போட்டி; அரசு கேபிளில் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் – அமைச்சர் மனோதங்கராஜ்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு.
கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழாவாக விளங்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20–ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை தனியார் கேபிள் சேனல், டிஸ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஒரு சில செயலிகளில் நேரலையாக ஒளிபரப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தார் உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என்று அமைச்சர் மனோதங்கராஜ் அறிவித்துள்ளார்.