உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! வேட்புமனுவில் பொய்யான தகவல்கள்…
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நின்று வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
எம்.எல்.ரவி என்பவர் அதே தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக களமிறங்கி தோல்வி கண்டவர். இவர் குறிப்பிட்டுள்ள மனுவில், உதயநிதி வேட்புமனுவில் அவர் மீது எந்தவித குற்ற வழக்குகளும் இல்லை என குறிப்பிட பட்டு இருந்தது. ஆனால் அது பொய்யான தகவல். அவர் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதனை நாங்கள் அப்போதே தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அவர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விதிமீறி பெற்ற இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ரவி வழக்கு தொடுத்துள்ளார்.