அந்த ரெண்டு நாள் பயமா இருந்தது.! காதலை வெளிப்படுத்திய கெளதம் கார்த்திக்.. காத்திருக்க வைத்த மஞ்சிமா.!
நடிகர் கெளதம் கார்த்தி மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தங்களுடைய திருமண தேதியை அறிவித்தனர். இதில் பேசிய கெளதம் கார்த்தி ” இன்று ஒரு சந்தோஷமான செய்தியை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்திருக்கிறோம். அந்த செய்தி என்னவென்றால், நவம்பர் 28-ஆம் தேதி, எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. அதனால உங்கள முன்கூட்டியே சந்திக்கிறோம். உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதுமே தேவை. நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே எனக்கு நீங்க பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படியுங்களேன்- தடைகளை தாண்டி தடம் பதித்த தளபதி விஜய்.! ‘கீதை’ முதல் ‘வாரிசு’ வரை…
கெளதம் கார்த்தியை தொடர்ந்து பேசிய நடிகை மஞ்சிமா மோகன், “நவம்பர் 28-ஆம் தேதி அன்று காலை எனக்கும் கெளதம் கார்த்திக்கிற்கும் திருமணம் நடைபெறவுள்ளது. மிக எளிமையாகவும், சிறப்பாகவும் ஒரு வேளை மட்டுமே எங்களுடைய திருமணம நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.வரவேற்பு நிகழ்ச்சி கிடையாது. எங்களால் முடிந்த வரைக்கும் 12.00 மணி முதல் 01.00 மணிக்குள் திருமண புகைப்படங்கள் வெளியீடமுயற்சி செய்கிறோம்” என்று கூறினார்.
பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் கௌதம் கார்த்திக் பதில் அளித்தார். அப்போது, ஒருவர் யார் முதலில் காதல் சொன்னது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் “நான் தான் முதலில் காதலை சொன்னேன். மஞ்சுமா 2 நாள் டைம் எடுத்தாங்க. அந்த இரண்டு நாள் எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. பட் ஓகேன்னு சொல்லி அக்செப்ட் பண்டாங்க” என கூறியுள்ளார்.