காவல்துறையில் துறை ரீதியான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம்: அரசாணை வெளியீடு
தமிழ்நாடு காவல்துறை சட்டத்தில் திருத்தும் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
இதில், காவல்துறையில் துறை ரீதியான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபி அனுமதி பெற்று விசாரிக்கலாம் எனவும் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.